களுத்துறையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி – பாடசாலை பெண் அதிபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.!!

1735

களுத்துறையில்..

களுத்துறை பிரதேசத்தில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் பெண் அதிபருக்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையினால் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. ஆசிரியர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக இரண்டு மாணவிகளின் உதவியை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக பிரதேசத்தில் உள்ள அரசியல் பிரபலத்தின் உதவியுடன் செயற்படும் அதிபர் அந்த பிரதேசத்தின் நகர சபையில் போட்டியிடும் ஒருவரை பாடசாலைக்கு அழைத்து அவருக்கு அரசியல் இலாபம் கிடைக்கும் வகையில் தேர்தல் சட்டத்தை மீறி நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த அதிபரின் நடவடிக்கையால் தங்கள் பெண் பிள்ளைகள் கூட சரியாக வளர்க்க முடியவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் அளித்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு முன்னர் இரண்டு இளைஞர்களுடன் அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்ற 16 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளும் அதே பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்பவர்கள் என தெரியவந்துள்ளது.

மாலை நேர வகுப்பு என்ற போர்வையில் இரண்டு இளைஞர்களுடன் விடுதிக்கு சென்ற மாணவிகளில் ஒருவரின் நிர்வாண சடலம் விடுதிக்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தி ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.