ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் பரிதாபமாக பலி.. விளையாடிக் கொண்டிருந்தபோது பரிதாபம்!!

1233

கிருஷ்ணகிரியில்..

அந்த காலத்தில் எல்லாம் அசால்ட்டாக 10 , 15 பிள்ளைகளை வளர்த்தனர். கூட்டுக்குடும்பமாக இருந்த அன்றைய வாழ்க்கையில் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, சித்தப்பா, மாமா என யாராவது ஒரு உறவினர் குழந்தைகளை பார்த்துக் கொள்வர்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் பெற்றோர் இருவரும் பணிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு என்பது பெரும் சவாலாகியுள்ளது. என்ன தான் கவனித்தாலும் கண் அசந்த நேரத்தில் விபரீதங்களும் , அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடுகின்றன.

குழந்தைகளை வீட்டு வாயிலில் விளையாட விட்டு உள்ளே வேலையாக இருந்த தாய் ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது இரு குழந்தைகளுமே சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பூலாகுட்டை கிராமத்தில் வசித்து வருபவர் மாதப்பன்.இவர் சென்னையில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சந்திரிகா.

இவர்களுக்கு 5 வயதில் ஸ்ரீநிகா மற்றும் 3 வயதில் அனிருத் என இரு குழந்தைகள். இவர்கள் இருவரும் மாலையில் வீட்டின் வாயிலில் விளையாடிக்கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக அருகே இருந்த ஊர் கிணற்றில் தவறி இரு குழந்தைகளும் விழுந்துவிட்டன.

ஒரு மணி நேரமாக தாயார் சந்திரிகா அவர்களை தேடவில்லை. அதன் பிறகு தேடிய போது அக்கம் பக்கத்தில் விசாரித்தார். யாரும் பார்க்கவில்லை. இரு குழந்தைகளும் கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வந்ததையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் தேடிப் பார்த்ததில் இரு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். மிதந்துள்ளனர்.

இரு குழந்தைகளையும் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.