பாக்கெட்டில் வைத்திருந்த கைபேசி திடீரென வெடித்து சிதறியதால் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

872

கேரளாவில்..

ரொம்பவே ஜாக்கிரதையா இருங்க மக்களே… சமயங்களில் ஆபத்து எந்த ரூபத்தில் வருகிறது என்றே புரியாமல் போய் விடுகிறது. பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதில் என்ன செய்வது என்றே தெரியாமல் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

இத்தனைக்கும் அந்த சமயத்தில் அவர் செல்போனைச் சார்ஜ் போடவில்லை.. எதுவும் செல்போன் விளையாட்டுக்களில் ஈடுபடவில்லை. யாருடனும் போனில் பேசவும் இல்லை. ச்ச்சும்மா பாக்கெட்டில் வெச்சிருந்த போன், அதுவாகவே வெடித்து சிதறியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஹரிஸ் ரகுமான் (23), தனது ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதில் அதிர்ச்சியடைந்தார்.

செல்போன் வெடித்து சிதறியதில் ஜீன்ஸ் பேண்டிலும் தீ பிடித்தது. உடனடியான பேண்ட்டில் பிடித்த தீயை சமயோசிதமாக ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். இந்த விபத்தில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹரிஷ் ரகுமான், இந்த செல்போன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீக்காயமடைந்த நிலையில், ஹரிஷ் ரகுமான் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திடீரென பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது அந்த பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் 8 வயது சிறுமி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென செல்போன் வெடித்ததில் சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து செல்போன் பயன்படுத்துபவர்கள் விபத்துக்குள்ளாவது, உயிரிழப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

செல்போன் பழுதடைந்தால் தரம் குறைந்த டூப்ளிகேட் பொருட்களைப் பயன்படுத்தி பழுதை சரி செய்ய கூடாது. சார்ஜரில் செல்போனைப் போட்டுக் கொண்டே பேச கூடாது.