பிரதமர் நரேந்திரமோடியின் முகநூல் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு ஒரு மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். பேஸ்புக்கில் பிரதமர் நரேந்திரமோடியின் அதிகாரபூர்வ பக்கம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட 4 நாட்களுக்குள் ஒரு மில்லியன் பேர் அந்த பக்கத்திற்கு லைக் கொடுத்துள்ளனர்.
கடந்த மே 27ம் திகதி இந்த முகநூல் பக்கம் தொடங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முகநூலின் இந்திய பொதுக் கொள்கை இயக்குநர் அன்ஹிதாஸ் கூறுகையில், பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்துக்கு குடிமக்களின் ஆதரவு கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏற்கனவே ஒரு மில்லியன் ரசிகர்களின் லைக்கை பெற்று விட்டது மேலும் இது அதிகரித்து உலக அளவில் அதிக லைக் பெற்ற ஒரு அரசியல் தலைவரின் பக்கமாக மோடியின் முகநூல் பக்கம் இடம்பெறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மேலும், வெள்ளை மாளிகையின் முகநூல் பக்கம் பெற்றுள்ள 1.2 மில்லியன் லைக் பெற்றதையும் தாண்டி இந்திய பிரதமர் மோடியின் முகநூல் பக்கம் குடிமக்களின் விருப்பத்தை பெறும் என தாஸ் தெரிவித்துள்ளார்.