நான் ஸ்ருதி ஹாசனை காதலிக்கவில்லை : ரெய்னா!!

846

Sruthi

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சுருதி ஹாசனும் காதலிப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து அதனை ரெய்னா மறுத்துள்ளார்.

மும்பை பத்திரிகையில் இருவரும் காதல் வசப்பட்டிருப்பதாகவும், ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதற்கு முன்பே ரெய்னா பூர்ணா படேல், முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் படேல் மகள், இந்தி நடிகை அனுஷ்கா சர்மா என அனைவருடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டவர்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசனை காதலிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து தனது டுவிட்டரில் ரெய்னா கருத்து கூறுகையில், நிறைய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

எல்லோருக்கும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஸ்ருதி ஹாசனின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், சுரேஷ் ரெய்னாவை சுருதி ஹாசன் காதலிப்பதாக வெளியான செய்தி உண்மை இல்லை. சுருதிஹாசன் சினிமாவில் பிசியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.