லண்டனில் இலங்கை தமிழ் இளைஞனுக்கு ஆயுள்தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

840

லண்டனில்..

மேற்கு லண்டனில் ஆப்கான் அகதியொருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் கடந்த 2021 ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி மேற்கு லண்டனில் சவுத்ஹாலில் உள்ள சாலையில் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அகதியான 16 வயது ரிஷ்மீத் சிங் என்பவர் பூங்காவில் நண்பர்களுடன் இருந்த போது குறித்த இளைஞர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் இலங்கைத் தமிழரான 18 வயது வனுஷன் பாலகிருஷ்ணன் (Vanushan Balakrishnan) மற்றும் இல்யாஸ் சுலைமான் (Ilyas Suleiman) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, வனுஷன் பாலகிருஷ்ணனுக்கு 24 ஆண்டும், சுலைமானுக்கு 21 ஆண்டும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ரிஷ்மீத்தும் அவரது தாயாரும் பிரித்தானியாவில் தஞ்சம் கோரி இருந்தமை நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை உயிரிழந்த ரிஷ்மித் சிங் சட்டவிரோத குழுக்களில் தொடர்புடையவர் அல்ல எனவும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் சிக்கிக்கொண்டதால், பரிதாபமாக கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.