இலங்கையில் திருமணமாகி 2 மாதங்கள் : விபத்தில் பலியான இளம் தம்பதி!!

1421

இரத்தினபுரி, திரிவானாகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹவத்த ஓபாத பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய எஸ்.மோகன் ராஜ் மற்றும் புஷ்பிகா ஹர்ஷனி தம்பதியே உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களோயான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக இரத்தினபுரி மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.



இன்று காலை ஏழு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அவர்கள் இருவரும் இரத்தினபுரி திரிவானாகெட்டிய விகாரைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் தனியார் பஸ்ஸை முந்திச் செல்லச் முயன்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளுடன் மோதிய டிப்பர் வண்டியின் சாரதி 40 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள உடவல பொலிஸ் நிலையத்தில் சரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.