கம்பளையில் 22 வயது யுவதி கொலை.. வாக்குமூலத்தின் அடிப்படையில் மீட்கப்பட்ட சடலம்!!

1259

கம்பளையில்..

கம்பளையில் காணாமல் போயுள்ள 22 வயது யுவதி பாத்திமா முனவ்வராவினுடையது என கூறப்படும் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.



கம்பளையில் காணாமல் போயுள்ள 22 வயது யுவதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரது சடலத்தை தேடுவதற்கான நடவடிக்கை இன்று எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் அடையாளம் காட்டிய இடத்தில் கம்பளை நீதவான் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கம்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியொருவர் கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த யுவதியை கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் கைதான 24 வயது சந்தேகநபர் நேற்றைய தினம் வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.