மாணவியின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி குறித்து பரபரப்பு தகவல்.. அமைச்சர் அதிரடி!!

1144

களுத்துறையில்..

16 வயதுடைய பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டது என களுத்துறை நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, Prasanna Ranatunga அதிகார சபையின் அதிகாரிகளுக்கு உத்தரவு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, முன்னதாக உடனடி விசாரணை அறிக்கை பெறப்பட்டு, அதன்படி, சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை மற்றும் தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.