ஒரே விமானத்தில் தாய், மகள் பணிப்பெண்கள்.. அன்னையர் தினத்தில் நடுவானில் தாயை நெகிழவைத்த மகள்!!

817

அன்னையர் தினத்தில்..

அன்னையர் தினத்தையொட்டி, ஒரே விமானத்தில் பணிப்பெண்களாக இருக்கும் தாய்-மக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இன்று அன்னையர் தினம்.

இந்த சிறப்பு நாளில், சமூக ஊடகங்களில் ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்த ஒரு காணொளி யாரையும் ஒரு நொடி நெகிழச்செய்யும்.

சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவின் ஆரம்பத்தில், indigo விமானப் பணிப்பெண் தன்னை நபிரா சம்ஷி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தொடங்குகிறார்.

பின்னர் தனது தாய இராம் சம்ஷியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி, அவரை அழைக்கிறார். அன்னையர் தினத்தில் உங்களை கண்ணீர் சிந்த வைத்ததற்கு செய்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார்.

தொடர்ந்து, தனது தாயார் 6 வருடங்கள் கேபின் குழுவினராக வேலை செய்வதைப் பார்த்துவருவதாகவும், தனக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்ததாகவும், இப்போது அவருக்கு முன்னாள் தானும் ஒரு விமான பணிப்பெண்ணாக நிற்பதில் பெருமை கொள்வதாகவும் கூறினார்.

அவரது தாய் கண்ணீருடன் தனது மகளுக்கு முத்தம் கொடுத்தார். நபிரா தனது அறிவிப்பை முடித்ததும், பயணிகள் இருவருக்கும் கைதட்டினர். இண்டிகோ நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.