மீண்டும் கடுமையான வெப்பம்.. இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

1242

கடுமையான வெப்பம்…

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, நாளை (16.05.2023) கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.

மனித உடலால் உணரப்படும் வெப்பம், அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.