வவுனியா நெளுக்குளம் மாட்டிறைச்சிக் கடையில் பழுதடைந்த இறைச்சி : சந்தேகநபருக்கு விளக்கமறியல்!!

1719


வவுனியா நெளுக்குளம் பிரதேச சபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள மாட்டிறைச்சி கடையில் பழுதடைந்த இறைச்சிகள் விற்பனை செய்த நிலையில் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



பொது சுகாதார பரிசோதகர்களான க.சிவரஞ்சன் மற்றும் த.வாகீசன் ஆகியோர் நேற்று முன்தினம் (19.05.2023) முன்னெடுத்த திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது நெளுக்குளம் பிரதேசசபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள மாட்டிறைச்சி கடையில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பழுதடைந்த மாட்டிறைச்சிகள் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டன.



இதனையடுத்து சந்தேகநபரையும் பழுதடைந்த இறைச்சிகளையும் பொது சுகாதார பரிசோதகர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 22.05.2023ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.