பச்சிளங் குழந்தையை தெருவில் வீசிச் சென்ற தாய் கடித்துக் குதறிய நாய்கள்!!

544


தமிழகத்தில்..கள்ளக்காதலிலோ, திருமணம் ஆகாமல் முறை தவறியே பெண்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பள்ளி கழிவறையில் மாணவி குழந்தைப் பெற்றெடுத்து பின்னர் யாருக்கும் தெரியாமல் சாக்கடையில் வீசிச் சென்றது அதிர்வலையை ஏற்படுத்தியது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில், பிறந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் உள்ள பச்சிளங்குழந்தையை யாரோ தொப்பிள் கொடி கூட சரியாக அறுக்காத நிலையில் வீசிச் சென்றுள்ளனர். இந்த குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பாதி உடலைக் காணாத நிலையில், பச்சிளங்குழந்தை ஒன்றின் உடலை அந்த பகுதியில் உள்ள நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து, நாய்களை விரட்டியடித்தனர். பின்னர், இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


தகவலறிந்து சோழவரம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குழந்தையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை அழுகிய நிலையிலும், முகம் அழுகி சிதைந்த நிலையிலும் காணப்பட்டது. நாய்கள் கடித்துக் குதறியதில் குழந்தையின் பாதி உடல் மட்டுமே இருந்தது.

குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தகாத முறையில் குழந்தை பிறந்ததால் தாய், அதனை வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.


முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமிராக்கள், சுற்றி உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போன்ற இடங்களில் கடந்த 10 நாட்களில் முன்பாக குழந்தை பெற்றவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். குழந்தையின் தாயைக் கண்டுப்பிடிக்கும் பணி குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.