10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறியழுத பெற்றோர்!!

480

காடம்பாடியில்..

நாகை காடம்பாடி புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கோபால் – இந்திரா தம்பதி வசித்து வந்தனர். மீனவரான கோபால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.

இதனால் இந்திரா, அவரது மகள் குணவதி( 15) ஆகியோர் வசித்து வந்தனர். இதில் சிறுமி குணவதி தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சிறுமி குணவதி அறிவியல் பாடத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் பெற்று தோல்வியடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சிறுமி பெரும் சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பிய தாய் மகளின் நிலையை கண்டு கதறி அழுதார்.

இது குறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.