என்னுடைய அப்பாவால் ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்.. நடிகை வடிவுக்கரசி வேதனை!!

1040

நடிகை வடிவுக்கரசி.

80. 90 களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் தான். இவர் 350ம் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படங்களிலும் நடித்துள்ளார்.



தற்போது வடிவுக்கரசி சீரியல்களில் நாயகி, வில்லி, அம்மா என பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வடிவுக்கரசி தனது வாழ்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், என்னுடைய அம்மா மற்றும் சித்தப்பா சினிமாவில் பணியாற்றி வந்தார்கள். ஒரு நாள் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்.

ஆரம்பத்தில் எனக்கு நடிக்க சரியான வாய்ப்பு வரவில்லை, அந்த சமயத்தில் எனக்கும் நடனம் மற்றும் காதல் காட்சிகளில் நடிக்க வராது. இதனால் நான் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.