வவுனியாவில் வெடிகுண்டு அச்சுறுத்தல்… மாவட்ட பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

2783

வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலையடுத்து பாடசாலைகளுக்கு கோட்டக்கல்வி பணிப்பாளரினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது

வவுனியா மற்றும் செட்டிக்குளத்திலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் , ஆசிரியர்களும் தங்களது பாடசாலையில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பூரண ஏற்பாடுகளை முன்னெடுப்பதுடன்,

வெளி ஆட்கள் பாடசாலைக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாணவர்களை பாடசாலை முடிவடைந்த நேரத்தில் மாணவர்களை பகுதி பகுதியாக அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாவட்டத்தினுள் குண்டுதாரிகள் உள்நுழைந்துள்ளதாக தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளமையினால் பாடசாலைகளில் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டமையினையடுத்தே இவ் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.