தெரியாமல் சகோதரியை மணந்த அண்ணன் : தெரிந்ததும் விவாகரத்து!!

334

Hands

சவுதி அரேபியாவில் திருமணமான தம்பதியர் 25 வருடங்களுக்கு பின் தாங்கள் உடன்பிறந்தவர்கள் என்பதை அறிந்துள்ளனர்.

சவுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணமான தம்பதியர் ஒருவர் 7 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் தன் மனைவி தான், சிறுவயதில் தொலைந்து போன தனது இளைய சகோதரி என உறவினர் ஒருவர் மூலம் இத்தம்பதிருக்கு தெரியவந்துள்ளது.

இதன்பேரில் இவர்கள் மரபணு சோதனை செய்து பார்த்தபோது, தாங்கள் இருவரும் அண்ணன் தங்கை என்ற உண்மை உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்நபர் மனைவியாகிய சகோதரியை விவாகரத்து செய்ய முடிவு செய்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதனையடுத்து அவர்கள் தந்த ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றமும் விவாகரத்து வழங்கியது.

இதற்கிடையே சகோதரியை திருமணம் செய்த நபருக்கு கடும்தண்டனை வழங்கவேண்டும் என சவுதி அரேபியா முப்தி என்ற அமைப்பு பரிந்துரை செய்தபோதிலும் அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது.