வவுனியாவில் 40 நிலையங்களில் 4480 மாணவர்கள் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்!!

1030


க.பொ.தராதர சாதாரணதர பரீட்சை இன்று (29.05) ஆரம்பித்த நிலையில் வவுனியாவில் 4480 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதுடன் அவர்களுக்காக 40 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்துசெய்யப்பட்டு பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.

இம்முறை சாதாரணதர பரீட்சைக்கு வவுனியாவில் 4480 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக 40 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 14 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


குறித்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 472553 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் 394450 பாடசாலை பரீட்சார்த்திகளும், 78103 தனியார் பரீட்சார்த்திகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.