40 முறை கத்தியால் குத்தி, கல்லைப் போட்டு சிறுமி படுகொலை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

711

டெல்லியில்..

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாலியல் வன்முறைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. பெண்கள், குழந்தைகள் தனியாக வெளியில் செல்லவே அச்சத்தில் உள்ளனர்.

நிர்பயா விவகாரம் தொடங்கி துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து நாய்களுக்கு போட்ட கொடூர ஷ்ரத்தா கொலை வரை திகிலில் உறைய வைக்கிறது. அந்த வரிசையில் டெல்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது க சாக்ஷி என்ற இளம்பெண், அமைதியாக சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது சாஹல் என்ற 20 வயது காதலன், சரமாரியாக கத்தியால் 40 முதல் 50 முறை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அத்துடன் நில்லாமல் ஆத்திரத்தில் கோபம் தணியாமல் அருகில் கிடந்த பெரிய எடுத்து மீது பலமுறை போட்டு சிறுமியின் தலையை நொறுக்கினார்.

இந்த கொடூர கொலையில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அந்தப்பக்கம் சென்றவர்கள் இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தனரே தவிர யாரும் தடுக்க முன்வரவில்லை. அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை.

அந்த இளைஞரை பார்த்து பயந்து பின்வாங்கினர். ஆனால் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில் “நடந்த குற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது, மக்கள் பலர் பார்த்துள்ளனர்,

ஆனாலும் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பாற்ற நகரமாக டெல்லி மாறிக் கொண்டு வருகிறது ” என ஸ்வாதி மாலிவால் கூறி உள்ளார். சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த சாஹல் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஷஹபாத் டெய்ரி காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் இந்த கொடூர சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான கொலைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

“டெல்லியில் ஒரு சிறுமி கொடூரமான முறையில் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டார். இது மிகவும் வருத்தம் மற்றும் துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளிகள் அச்சமற்றவர்களாகி விட்டனர், காவல்துறைக்கு பயம் இல்லை. எல்ஜி சார், சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பு, ஏதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என கூறி உள்ளார்.