ஆண் வேடமிட்டு மாமியாரை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற மருமகள்!!

404

நெல்லையில்..

நெல்லையில் மருமகள் ஆண் வேடமிட்டு மாமியாரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் துலுக்கர்குளம் அருகே உள்ள கிராமம் வடுகன் பட்டி.

இந்தக்கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி சீதாராமலட்சுமி. இவர்களுக்கு ராமசாமி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ராமசாமிக்கு மகாலட்சுமி என்பவருடன் திருமணம் முடிந்து இரு ஆண்குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் ராம்சாமி அம்மாவிற்கும், அதாவது மகாலட்சுமிக்கும் சீதாராம லட்சுமிக்கு ஆரம்பத்தில் இருந்தே முட்டல் மோதல் நிலவி வந்ததாகத் தெரிகிறது.

இவர்களுக்கிடையேயான மோதலை பார்த்த ராமசாமி மனைவியுடன் தனியாக சென்று வாழ விருப்பப்பட அதற்கு அனுமதிக்காத சீதா வீட்டின் பின்பகுதியிலேயே தனியாக வீடு கட்டிக்கொடுத்து அதில் மகனையும் மகளையும் தனிக்குடித்தனம் வைத்திருக்கிறார்.

இருப்பினும் இருவருக்கும் இடையேயான கருத்துவேறுபாடும் மோதலும் முடிவுக்கு வந்த பாடியில்லை. ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற மகாலட்சுமி மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அண்மையில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில் மாமியார் தனியாக தூங்கிகொண்டிருப்பதை பார்த்த மகாலட்சுமி அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

ஆனால் நாம்தான் கொலை செய்தோம் என்பது தெரியக்கூடாது என்பதற்காக வேறு ஒருவர் வந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது போல நாடகம் நடத்த மகா திட்டமிட்டு இருக்கிறார்.

அதன்படி கணவரின் பேன்ட் சட்டையை அணிந்து கொண்ட மகாலட்சுமி இரு சக்கர வாகனத்தின் ஹெல்மெட்டை எடுத்து தலையில் அணிந்து கொண்டார். தொடர்ந்து இரும்புக்கம்பியுடன் மாமியார் படுத்திருந்த அறைக்குள் நுழைந்த அவர் தூங்கிக்கொண்டிருந்த சீதாராம லட்சுமியை சரமாரியாக தாக்கினார்.

இரத்தவெள்ளத்தில் மாமியார் மயக்கமடைய அவர் இறந்து விட்டார் எனக்கருதி மகாலட்சுமி அங்கிருந்து சென்றிருக்கிறார். மேலும் இதனை மர்மநபர்கள்தான் செய்தார்கள் என்பதை காட்சிப்படுத்த சீதாராமலெட்சுமியின் கழுத்தில் கிடந்த ஐந்தரை சவரன் தங்கநகையை அறுத்து எடுத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து சீதாராமலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன்றி சீதா உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில் மகாலட்சுமியின் உருவம் பொருந்திய ஒருவர் பேன்ட்.,சர்ட் போட்டு நடந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மகாலட்சுமியிடம் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில் அவர் செய்த தவறை ஒத்துக்கொண்டார்.