வவுனியாவில் 5 வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கும் பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார நிலுவை 4 இலட்சத்தை கடந்தது : மின் துண்டிப்பு!!

1315

வவுனியாவில் அமைக்கப்பட்டு 5 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார கட்டண நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளதால் குறித்த பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் 291 மில்லியன் ரூபாய் செலவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு அங்கு 55 கடைத் தொகுதிகளும் உள்ளன.

குறித்த பொருளாதார மத்திய நிலையமானது கடந்த 5 வருடங்களாக திறக்கப்படாது உள்ள நிலையில் அதன் மின்சாரப் பட்டியலுக்கான கொடுப்பனவு நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

தனித்தனி கடைகளுக்குமான மின்சாரப் பட்டியல்களின் ஒருமித்த தொகையே 4 இலட்சத்தை கடந்துள்ளது. இதன் காரணமாக குறித்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் கதரணமாக அங்கு கடமையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பொருளாதார மத்திய நிலையமானது திறக்கப்படாத போதும் கோவிட் தொற்று காலப்பகுதியில் அது சிகிச்சை நிலையமாக குறிப்பிட்ட சில மாதங்கள் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரிடம் கேட்ட போது, குறித்த பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படாத போதும் கொவிட் தொற்றாளர்களின் பராமரிப்பு நிலையமாக தொழிற்பட்டது.

ஆனால் பொருளாதார மத்திய நிலையம் திறப்பதற்கு முன் மின்கட்டண நிலுவை செலுத்தி மீள் மின்னிணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.