கை, கால்கள் வெட்டப்பட்ட நடனத் தாரகை!!

628

Lady

அமெரிக்காவின் ஆரெகான் மாநிலத்தில் உள்ல போர்ட்லாண்டை சேர்ந்தவர், கியெரா ப்ரிங்க்லி(20). இரண்டு வயது சிறுமியாக இருந்த போது கடுமையான பக்டீரியா தொற்றுக்கு உள்ளாகியதால், இவருடைய கால், கைகளை வைத்தியர்கள் அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தனது சகோதரி உரையாவுடன் சேர்ந்து பள்ளிப் படிப்பை முடித்த கியெரா, சோர்ந்துப் போய் சக்கர நாற்காலியே கதி என்று இருந்து விடாமல் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட சகோதரியின் நடனத்தை பார்த்து, அதில் ஈர்ப்பு ஏற்பட்டு, துண்டிக்கப்பட்ட கை, கால்களின் உதவியுடன் அவருக்கு நிகராக நடனம் ஆடி அசத்தி வருகிறார்.

ஒரு மருத்துவ தாதியாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறும் கியெரா அதற்கான காரணமாக குறிப்பிடுவது, நெஞ்சை நெகிழச் செய்கிறது. “நான் பல முறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நிறைய பேர் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

இப்போது, அந்த நன்றிக் கடனை எல்லாம் திருப்பி செலுத்தும் விதமாக அவர்களுக்கு எல்லாம் உதவிடும் வகையில் மருத்துவ தாதியாகி சேவை செய்ய விரும்புகிறேன்’ என்று இவர் கூறுகிறார்.