ஜோடியாக ஊர் சுற்றிய காதலர்கள்… விபத்தில் பலியான காதலியை சாலையோரம் வீசிச் சென்ற காதலன்!!

589

திருச்சியில்..

காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டதில், படுகாயமடைந்த காதலியை பயத்தில், காப்பாற்ற முயற்சி செய்யாமல் சாலையோரம் வீசி விட்டு சென்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.

வேறொரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலியைக் காப்பாற்றாமல் அப்படியே சாலையில் காதலன் வீசி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிநயா(23).

இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவரைக் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பார்த்திபனுக்கு வீட்டில் வேறொரு பெண் பார்த்து திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள நிலையில், திருமண பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு, அபிநயா வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே தகராறு எழுந்துள்ளது. பார்த்திபன் கோபமாக கிளம்பி விட்டார். பின்னர், பார்த்திபனுக்கு போன் செய்த அபிநயாவிடம், உடையார்பாளையம் வந்து விடுமாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

இருவரும் உடையார்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்து, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியுள்ளனர். அதன் பின்னர், இரவு அபிநயாவை வீட்டில் விடுவதற்காக திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பொட்டக்கொல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த பார்த்திபனின் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

இதில், உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அபிநயா படுகாயமடைந்தார். இந்நிலையில், அபிநயா இத்தனைக் காயங்களுடன் பிழைப்பாரா என்று பயத்தில், பார்த்திபன், அபிநயாவை அங்கிருந்து சாலையின் ஓரத்தில் தூக்கி வீசி விட்டு, எதுவும் தெரியாதவராய் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டார்.

அந்த பகுதியில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு அந்த வழியே சென்றவர்கள் தகவல் தந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையிலான போலீசார், அபிநயாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அபிநயா குறித்து விசாரித்து வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், விபத்துக்குள்ளாகி, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அபிநயாவை காப்பாற்ற முயற்சிக்காமல் அப்படியே சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து பார்த்திபன் தப்பி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, உயிருக்கு போராடிய காதலியை காப்பாற்ற முயற்சிக்காமல் சாலையோரம் வீசிச் சென்ற பார்த்திபனை போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.