புற்று நோயை வென்ற 91 வயது மூதாட்டி மரதன் போட்டியில் சாதனை!!

580

Old ladyஅமெரிக்காவின் சான் டியாகோ நகரில் நடைபெற்ற 26.2 மைல் (சுமார் 42 கிலோ மீட்டர்) மரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 91 வயது மூதாட்டி ஹேரியட் தோம்சன் 7 மணி நேரம், 7 நிமிடம், 42 வினாடிகளில் அந்த தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இரண்டு முறை புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று நோயை வென்ற இந்த பெண்மணி, புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நிறுவனத்துக்கு நிதி திரட்டும் முயற்சியில் கடந்த 15 ஆண்டுகளாக மரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த முயற்சியின் மூலம் இது வரை 90 ஆயிரம் டொலர்களை நிதியாக திரட்டி தந்துள்ள இவர், அமெரிக்காவிலேயே மரத்தான் போட்டிகளில் பங்கேற்கும் இரண்டாவது முதிய பெண்மணி ஆவார். கடந்த வாரம் நடைபெற்ற சான் டியாகோ மரத்தானில் பங்கேற்ற ஒரே வயது முதிர்ந்த பெண் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது வயதில் உள்ளவர்கள் பந்தய தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் சராசரி நேரத்தை விட 3 மணி நேரம் முன்னதாக தனது இலக்கை இவர் வந்தடைந்துள்ளார்.

சாதனைக்கு மட்டுமல்ல கொடை குணத்துக்கும் வயது ஒரு தடையே அல்ல என்பதை நிரூபிக்கும் ஹேரியட் தோம்சன் இன்னும் பல நூறு மரத்தான்களில் பங்கேற்க வாழ்த்துவோம்.