
பிரித்தானியாவில் நாய் கடித்து முதியவர் ஒருவர் மரணமடைந்ததால் அதன் உரிமையாளருக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் லிவர்பூல் நகரில் வசித்து வந்த் கிலிபர்ட் கிளார்க் (79) என்ற முதியவர் நாய் கடித்து மரணம் அடைந்துள்ளார். இதனால் நாயின் உரிமையாளர்கள் ஹேலி (30) மற்றும் டெல்லா (29) ஆகிய இருவருக்கும் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாயானது, தனது தோட்டத்தில் இருந்து வெளியேறி பக்கத்து வீட்டில் உள்ள முதியவரை தாக்கியுள்ளது, இதனைத் தொடர்ந்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உயிரிழந்தார். பொலிஸ் அதிகாரிகள் இந்த நாயை சுட்டு கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.





