தாடியால் தனிமைப்படுத்தப்படும் இந்தியர்!!

774

Singh

தாடி மற்றும் தலைப்பாகை முதலிய அடையாளங்களால் தான் தனிமைப்படுத்தப்படுவதாக “மாஸ்டர்கார்ட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் அஜய் பாங்கா வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசித்துவரும் “மாஸ்டர்கார்ட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரான அஜய் பாங்கா இதுகுறித்து நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் வணிகப்பள்ளியில் கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது மாணவர்களிடையே பேசுகையில், எனது அடையாளங்களால் தனிமைப்படுத்தப்படுகிறேன் என்றும் பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தும் அமெரிக்க விமான நிலையங்களில் அதிக சோதனைக்கு ஆட்படுத்தப்படுகிறேன் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.