வவுனியா தேசிய கல்வியில் கல்லூரியில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்வு!!

837

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களால் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரி வளாகத்தில் மர நடுகையோடு ஆரம்பமான நிகழ்வில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் மரங்களை நாட்டிவைத்ததுடன் கல்லூரி வளாகத்தில் இருந்து பேரணியாக பூந்தோட்டம் சந்திவரை சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர். இதன்போது சுற்றுசூழல் தொடர்பான பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கேசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது வீதியால் சென்றவர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி வைத்த ஆசிரிய மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக விழிப்புணர்வு நாதகமொன்றினையும் ஆற்றுகை செய்திருந்தனர்.