திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றிய இளைஞன்.. இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!

6530

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டையில் காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கிய காதலரை தன்னோடு சேர்த்து வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (ஜூன் 5) இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்த இம்ரான் பரீக் என்பவரும் கங்காவும் கடந்த 9 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இம்ரான் பரீக்கின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் காதலரின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இம்ரான் பரீக் மலேசியா சென்றுவிட்டார்.

அங்கிருந்து பெண்ணை தொடர்புகொண்ட அவர் மலேசியாவுக்கு அவரையும் வருமாறு கூறியுள்ளார். இவரும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் ஒன்றாக இருந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட இம்ரான் பரீக் அவரை மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரிடம், தற்போது ஊருக்கு செல் பின்னர் அங்கு வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரை மலேசியாவில் இருந்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பெண் தனது தாய் வீட்டிற்கு வந்து நடந்ததை எல்லாம் கூறிய பிறகு பெற்றோர் அவரது காதலரின் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டனர்.

இதனைத் தெரிந்து கொண்ட இம்ரான் பரீக் கங்காவிடம் செல்போனில் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த கங்கா தாம் ஏமாற்றப்பட்டது அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், இதனைத்தொடர்ந்து கண்ணீர் மல்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், ஆட்சியரை சந்தித்து தனது காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் அல்லது தன்னை ஆசை வார்த்தைக்கூறி குடும்பம் நடத்தி ஏமாற்றியவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

மேலும் இது குறித்து கங்கா அளித்த மனுவுடன், இருவரும் இணைந்து எடுத்துகொண்ட புகைப்படங்கள், திருமண பத்திரிக்கை உள்ளிட்டவைகளையும் இணைத்துள்ளார். காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கி தன்னை ஏமாற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கர்ப்பிணி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.