கிளிநொச்சியில் பாடசாலை மாணவி பரிதாபமாக பலி!!

1365


கிளிநொச்சியில்..கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் க.பொ.த உயர்தரம் கல்விகற்க்கும் மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -18) குறித்த மாணவியின் மரணம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மாணவியின் இந்த முடிவானது கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவியின் இரங்கல்களை கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த கவலையுடன் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்ததை காணக்கூடியதாக உள்ளது.
பவான் பனுஷா அவர்களின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை முல்லைத்தீவு நியூஸ் பேஸ்புக் குரூப் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.