
தென் மாகாணத்தின் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் பேய்களின் நடமாட்டம் காணப்படுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. பேய்களின் நட்டமாட்டம் காரணமாக கடமைகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியசாலை கட்டடத்தின் சில பகுதிகளில் பேய்களின் நடமாட்டத்தை அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.
தலையில்லாத முண்டங்கள் நடமாடுவதாகவும், அண்மையில் உயிரிழந்த ஓர் நோயாளி நாடமாடுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இரவு நேர கடமையில் ஈடுபடும் சில ஊழியர்கள் பேய்களின் நடமாட்டத்தை கண்டு பீதியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதனால் இரவு நேர கடமையில் ஈடுபட சில ஊழியர்கள் நாட்டம் காட்டுவதில்லை எனத் தெரியவருகிறது.





