
ஒருநாள் போட்டி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.
இதில் அணிகளுக்கான தரவரிசையில், இந்திய அணி (112 புள்ளி) 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி (112), தசம புள்ளிகள் வித்தியாசத்தில், 2வது இடத்துக்கு முன்னேறியது. அவுஸ்திரேலிய அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஒருநாள் போட்டி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்திய அணித்தலைவர் தோனி 6வது இடத்தில் நீடிக்கிறார்.
மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரோகித் சர்மா 20வது இடத்துக்கு முன்னேறினார். இலங்கை வீரர் தில்ஷன் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார்.
தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், அவுஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி முறையே 2, 3வது இடங்களில் உள்ளனர்.





