புத்தகத்தின் மேலுறையாக பெண்ணின் தோல் : நூலகத்தில் பரபரப்பு!!

589

Book

அமெரிக்காவில் பெண்ணின் தோலினால் பிணைக்கப்பட்ட புத்தகம் நூலகம் ஒன்றில் இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வார்ட் நூலகத்தில் இருந்த 3 மூன்று புத்தகங்கள் மீது அங்குள்ள அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பியதில், அவற்றில் இரண்டு புத்தகங்கள் ஆட்டு தோலினாலும், மற்றொரு புத்தகம் பெண்ணின் தோலினாலும் பிணைக்கப்பட்டுள்ளது (பைண்டிங்) என்பது உறுதியானது.

இதில் மனித ஆன்மாவை வசப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளை பிரெஞ் நாவலாசிரியர் ஒருவர் எழுதிய புத்தகத்தின் அட்டைக்கு மேலுறையாக, மாரடைப்பால் மரணம் அடைந்த அடையாளம் தெரியாத மனநோயாளி பெண்ணின் தோல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த தோலின் ரோமக் கால்களை மிக துல்லியமாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு வேளை இந்த புத்தகம் மனித ஆன்மா சம்பந்தப்பட்டது என்பதற்காக மேல் அட்டையாக மனித தோலை பயன்படுத்தி இருப்பார்களோ என கருதுகின்றனர்.