ஏழை கரகாட்டக்கார பெண்ணின் வங்கிக் கணக்கில் 4 கோடி பணம் : தீவிர வேட்டையில் பொலிஸ்!!

613

Lady

வேலூரில் கரகாட்ட குழு ஒன்றை நடத்தி வரும் மோகனாம்மாளின் வீட்டில் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்த மோகனாம்மாள், கரகாட்ட குழுவை நடத்தி வருகிறார். இவர் காட்பாடி தாராபடவேடு கோவிந்தராஜ முதலியார் தெருவைச் சேர்ந்த தனது தோழியான மற்றொரு கரகாட்ட பெண் ஜமுனா என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் 25ம் திகதி இரவு எஸ்பி விஜயகுமார் தலைமையிலான பொலிசார் மோகனாம்மாள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதில் ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 பணமும், 73 பவுண் தங்க நகையையும் கைப்பற்றியுள்ளனர்.

ஏழ்மையான குடும்பத்தில் ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த மோகனாவுக்கு, கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் சிக்கியது பொலிசாரிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த கஸ்பா வசந்தபுரம் பகுதி மக்களிடம் பொலிசார் விசாரித்தபோது, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்பா கானாறு பகுதியில் புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து குடியேறினார் கோவிந்தம்மாள்.

ஆரம்பத்தில் தினக்கூலியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய கோவிந்தம்மாள், நிலைமை நாளுக்கு நாள் அபார வளர்ச்சி பெற்றது.

பின்னர், நிர்மலாவை வைத்து தனியாக கரகாட்ட குழுவை தொடங்கினார், குறுகிய காலக்கட்டத்தில் நிர்மலாவின் கரகாட்டம் வேலூர் மாவட்டம் முழுவதும் அரங்கேறியது.

தனது கரகாட்டக்குழுவின் வளர்ச்சியை கண்டு வியந்துபோன கோவிந்தம்மாள், தனது கடைக்குட்டி மகளான மோகனாம்மாளையும் இந்தக்குழுவில் சேர்த்துவிட்டார்.

பள்ளிக்கூடம் பக்கம் கூட தலை வைக்காத மோகனாம்மாள், கரகாட்டம் ஆடுவதில் தன்னை வல்லவராக தேற்றி கொண்டார்.
மோகனாம்மாளின் நடனம் வேலூர் மாவட்டத்தை தாண்டி வெளிமாவட்ட ரசிகர்களையும், ஆந்திர மாநில ரசிகர்களையும் கவர்ந்தது.

இதனால் மோகனம்மாளின் கரகாட்டத்துக்கு ஆந்திராவில் புகழ் பரவியது. தனக்கென ஒருதனி கரகாட்டக்குழுவை தொடங்கினார்.
மேலும், தான் சம்பாதித்த பணத்தில் தனது அக்கா நிர்மலா, விஜயா மற்றும் மகேஸ்வரி ஆகியோரை கவனித்து வந்தார்.

நிர்மலா, விஜயா, மோகனாம்மாள் ஆகியோரின் கரகாட்டம் பாரம்பரியமாக தொழில் நடத்தி வந்த கரகாட்டக்குழுவினரை காணாமல் போக செய்தது.

அதனால் காலப்போக்கில் தனது குடும்பத்தின் அதிகாரம் மிக்க ஒருவராக மாறினார் மோகனாம்மாள். நாளடைவில் தனது அக்கா நிர்மலா, விஜயா, மகேஸ்வரி ஆகியோரை வீட்டைவிட்டு விரட்டினார்.

கஸ்பா கானார் தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டை வாங்கி மோகனா இல்லம் என்று பெயர் வைத்து அழகு பார்த்தார்.

அந்த வீட்டில் தனது தாய் கோவிந்தம்மாளுடன் தனிமையில் வசித்து வந்தார். இதன்பிறகு மோகனாம்மாள் வீட்டிற்கு அவரது அக்காள்கள் மற்றும் உறவினர்கள் யாரும் வருவது கிடையாது.

இப்படி திசைமாறிய மோகனம்மாளின் வாழ்க்கையில்தான் செம்மரக் கடத்தல் கும்பல்கள் தொடர்பு ஏற்பட்டது.

உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு வந்த முக்கிய பிரமுகர்கள் மோகனம்மாளின் வலையில் விழுந்தனர். அவர் பலருக்கு பினாமியாக மாறியதாக தெரிகிறது.

கடத்தல் கும்பல் தொடர்பு, முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு, காவல் துறையின் அனுசரணை என அவரது கட்டுப்பாட்டில் செல்வம் கொழிக்க ஆரம்பித்தது.

மேலும், இப்போது கடத்தல் கும்பல்காரனால் காட்டிக்கொடுக்கப்பட்டு காவல் துறையினரால் தேடப்பட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.