இந்தியாவின் இளம் தூதராக தமிழக சிறுவன் தெரிவு!!

681

shrenik_child_ambassador_001இந்திய நாட்டின் இளம் தூதராக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரேநிக் காந்தி என்ற சிறுவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் வரும் யூலை மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள கலாசார பரிமாற்ற மாநாட்டில் இந்தியாவின் இந்தியாவின் பிரதிநிதிகளாக ஜூனியர் சேம்பர் இண்டர்நேசனல் அமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 மாணவர்கள் உள்பட மொத்தம் 6 பேரும்தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய நாட்டின் ஜூனியர் தூதர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுடன் மற்ற 24 நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் தங்களது நாட்டின் கலாசாரத்தை மாநாட்டில் பிரதிபலிக்க உள்ளனர்.

இதுகுறித்து மாணவன் ஸ்ரேநிக் காந்தி கூறுகையில், நான் இந்தியாவில் இருந்து தேர்வான மற்ற 5 மாணவர்களுடன் இணைந்து மாநாட்டில் இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மையை சித்தரிக்கும் ஒரு நடன கலாசார நிகழ்ச்சியை வழங்க வேண்டும்.

மேலும், தற்போது இதற்கான பயிற்சிகளில் எனது தாயார் உதவியுடன் ஈடுபட்டு வருகிறேன் என்றும், இதற்காக ஜப்பானிய மொழி பயின்று வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.