பெண் பேய் ஒன்று தன்னை, கத்தியால் குத்திவிட்டது என்று கூறி இராணுவ வீரர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு வாழபந்தல் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் ( 50), ஒய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி இறந்துவிட்டார்.
இதனால் தனியாக வசித்த வந்த முனிரத்தினம் நேற்று முன்தினம் வயிற்றில் காயத்துடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வாழபந்தல் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சம்பவத்தன்று பெண் பேய் ஒன்று நிர்வாணமாக வந்து கத்தியால் என்னை குத்த பாய்ந்தது. இறுதியில் எனது வயிற்றை கீறிவிட்டு சென்றுவிட்டது.
இதில் காயமடைந்த நான் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன் என்றும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இந்த புகார் மனுவால் குழம்பிபோன பொலிசார், எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்வது என திகைத்துள்ளனர்.