
சிங்கமுத்து, தன்னை சந்திக்கும் பட அதிபர்களிடம் வடிவேலுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடிவேலு, சிங்கமுத்து இருவருக்கும் இடையே இரண்டு வருடங்களுக்கு முன்பு நில மோசடி விவகாரம் ஒன்றில் தீவிரமாக சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில், வடிவேலு சிலவருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கொமடியனாக நடிக்க தகுந்த கதையை தேடிவருவதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்ட சில தயாரிப்பாளர்கள் மீண்டும் வடிவேலு- சிங்கமுத்துவை படத்தில் இணைந்து நடிக்க வைக்க யோசித்து சிங்கமுத்துவை அணுகியுள்ளனர்.
அப்போது பேசிய சிங்கமுத்து, எனக்கொன்றும் பிரச்சனை இல்லை என்றும், ஆனால் எனக்கும் வடிவேலுவுக்கும் இடையே தீர்க்கப்படாத பிரச்சனை நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக வழக்காக நடக்கிறது.
அவரிடமிருந்து நான் ஏழரை கோடிகளை ஏமாற்றிவிட்டதாக என்மீது புகார் அளித்துள்ளார். அந்த வழக்கு சம்பந்தமாக நான் இப்போதும் நீதிமன்றம் அலைகிறேன்,ஆனால் அவர் வாய்தா மேல் வாய்தாவாக போட்டுக்கொண்டே இருக்கிறார்.
அதனால், அவரை நீதிமன்றம் வரவைத்து, இவ்வழக்கை முடித்துவைத்தால் நாங்கள் இருவரும் இணைந்து மீண்டும் கொமடி கூட்டணி அமைக்கிற முதல் படம் உங்கள் படமாத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதை கேள்விபடும் தயாரிப்பாளர்கள் இதெல்லாம் நாம் சொன்னால் நடக்கின்ற விடயமா என்று குழம்பியுள்ளனர்.





