வவுனியாவை ஆக்கிரமித்து வரும் பாதீனியம்!!

327

parthenium

வவுனியா மாவட்டத்தில் பாதீனியம் களை மிக வேகமாக பரவி வருவதனால் விவசாயிகள் உட்பட பிரதேச மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

வயல்நிலங்கள், போக்குவரத்து பாதையோரங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வியாபித்து பரவிவரும் களையானது பயிர்ச்செய்கைகள் மற்றும் கால் நடைகளை பாதிப்பதாக விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இந்திய இராணுவம் வடக்கை ஆக்கிரமித்திருந்த காலத்தில் அங்கிருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகளின் மூலமாக இக்களை இப் பிரதேசத்திற்கு வந்திருப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள் இதனை கட்டுப்படுத்துவதற்கு முறையான செயன்முறை இன்மையே காரணமெனவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஒரு பாதீனியம் களையில் இருந்து பத்தாயிரம் வரையான புதிய களைகள் தோன்றுவதாக தெரிவிக்கும் விவசாய திணைக்கள அதிகாரிகள் மக்களிடம் முறையான விழிப்புணர்வின்மையே இக்களையை கட்டுப்படுத்த முடியாமைக்கு காரணமெனவும் தெரிவிக்கின்றனர்.

பயிர் நிலங்களில் இக்களை வளர்வதனால் ஏனைய பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படுவதுடன் உற்பத்தியும் குறைவடைந்து செல்கின்றது.

எனவே இக்களையை கட்டுப்படுத்துவதற்கு முறையான செயற்பாடுகளை விவசாய திணைக்களங்கள் முன்னெடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.