வவுனியாவில் நடைபெறும் வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள்!! (படங்கள்)

290

வட மாகாண பாடசாலைகளுகிடையிலான மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டிகள் வவுனியாவில் இன்றும் (05.06.2014) நாளையும் (06.06.2014) இடம்பெறுகின்றன.

15,17,19 வயது பிரிவுகளுக்கு உட்பட்ட அணிகள் மேற்படி போட்டிகளில் பங்குபற்றுகின்றன. வவுனியா யாழ்ப்பாணம் முல்லைதீவு மன்னார் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாடசாலைகள் அந்தந்த மாவட்ட சம்பியன் அணிகளை களம் இறக்கியுள்ளன.

ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றிய அணிகள் மாகாண ரீதியில் வவுனியாவில் களம் இறங்கியுள்ளன. தலா ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் 15 அணிகள் போட்டிகளில் களம் இறக்கப்பட்டுள்ளன.

15 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்திலும், 17வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்திலும், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் வவுனியா நகரசபை மைதானத்திலும் இன்றும் நாளையும் இடம்பெறுகின்றன.

போட்டிகள் தொடர்பான முடிவுகள் நாளைய தினம் (06.06.2014) கிடைக்கப்பெறும். முடிவுகளை அறிந்து கொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-பண்டிதர்-

1

2

3

4

5

6

7

8

9

10