கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தில் ஜெயப்பிரகாஷ் (30) – ராதா (28) என்ற இளம்தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஜெயப்பிரகாஷ் – ராதா தம்பதி மகிழ்ச்சியுடன்தான் தங்கள் இல்லறவாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் ராதாவுக்கு வயிற்றுவலி இருந்துவந்ததாகவும், அடிக்கடி வலிப்பதாக அவர் கூறி வந்துள்ளார். இதற்கு அவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு சென்றும் தீர்வுகிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் மீண்டும் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் விவசாயத்துக்கு பயன்படுத்த வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதில் ராதா வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ராதா உயிரிழந்து விட்டார். இது குறித்து ராதாவின் தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





