அனுராதபுரத்தில்…

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவர் தனது வீட்டில் குழந்தையை பிரசவித்து குப்பையில் வீசியமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிராலோகம பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய பெண் எனவும், அவர் கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் 02 மணி முதல் 03 மணி வரையில் காலப்பகுதியில் குழந்தை ஒன்றை பிரசவித்து குழந்தையை குப்பை மேட்டில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரின் தாயும் குழந்தையும் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த குற்றச் செயல் தொடர்பில் சந்தேகநபரின் தாயாரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம தலைமையக பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





