சுவரேறி குதித்து காதலனைத் திருமணம் செய்த இளம்பெண்… சினிமாவை மிஞ்சிய காதல் கதை!!

893

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் சென்னித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ராதிகா (21). பெற்றோருடன் வசித்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த அனீஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தார். பள்ளி பவருத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்தனர்.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலேயேயும் எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே அனீஷ் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். ராதிகா கல்லூரியில் படித்துவந்தார்.

இதனிடையே அனீஷ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். இதனால் ராதிகாவின் பெற்றோர் அவரை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டுச்சிறையில் வைத்தனர். அதோடு, வேறு மாப்பிள்ளை பார்த்து அவசர அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவந்தனர்.

இதுதொடர்பாக காதலன் அனீஷிடம் ராதிகா பேசியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த 5 நாட்கள் ஆன நிலையில், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காதலியை மீட்க நண்பர்களுடன் திட்டம்போட்டார்.

இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் பாத்ரூம் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற ராதிகா, சுவர் ஏறி குறித்து வீட்டைவிட்டு வெளியேறினார். அங்கு பைக்குகளில் தயாராக இருந்த அனீஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் தப்பினார்.

இருவரும் நண்பர்கள் ஆதரவுடன் கரவிளாகம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துக்கொண்டனர். இதனிடையே இரவில் மகள் வீட்டில் இருந்து தப்பியதை கண்டு போலீசில் புகாரளித்தனர். இதனைக் கேள்விப்பட்ட தம்பதியினர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தையில் திருமண கோலத்தில் தஞ்சமடைந்தனர்.

அப்போது, தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரியும் ராதிகா – அனீஷ் போலீசாரிடம் கூறினர். இது குறித்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஒருவழியாக சேர்ந்து வாழ குடும்பத்தினர் சம்மதித்தனர். இதனால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.