இன்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் : கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

610

Strom

காங்கேசன்துறையிலிருந்து பொத்துவில் ஊடாக புத்தளம் மற்றும் காலி வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இப் பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை குறித்த கடற் பிரதேசங்களில் அலையின் வேகம் அதிகமாக இருக்கும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிற்கு கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவப் பெறும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனால் மீனவர்கள், கடலை அண்டிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.