களுத்துறை சிறுமியின் மர்ம மரணம்.. சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

787

களுத்துறையில்..

களுத்துறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் கடந்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பிரதான சந்தேகநபரின் சாரதிக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.