போலி முகப்புத்தக உரையாடலால் 14 வயது சிறுவன் வன்புணர்வு!!

887

முகப்புத்தகத்தில்..

முகப்புத்தகத்தில் பெண் வேடமணிந்து 14 வயது சிறுவனை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுவன் கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரினுடைய போலி முகப்புத்தக பக்கம் உள்ளிட்ட தகவல்கள் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.