உலக இரத்ததான தினம் மன்னர் வீதியில் அமைந்துள்ள வவுனியா தாதியர் கல்லூரியில் நேற்று (05.06) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் வட மாகாண சபை உறுப்பினர்களான வைத்தியர் சிவமோகன், திரு.தியாகராசா, வவுனியா வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அகிலேந்திரன் ஆகியோருடன் வவுனியா சிரேஷ்ட பொலிஸ், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் நிகழ்வின் பெருமளவிலான குருதிக்கொடையாளிகளுடன் , வைத்தியர்கள், தாதியர் கல்லூரியின் அதிபர், விரிவுரையாளர்கள், தாதிய மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






