வவுனியா செட்டிக்குளத்தில் வீதியினை முழுமையாக ஆக்கிரமித்து நெல் உலர வைப்பு : போக்குவரத்து முற்றாக பாதிப்பு!!

1634

வவுனியா நெளுக்குளம் நேரியகுளம் பிரதான வீதியிலிருந்து சின்னத்தம்பனை ஊடாக செட்டிகுளம் – உலுக்குளம் பிரதான வீதிக்கு செல்லும் காபைட் வீதியில் தனிநபர் ஒருவர் வீதித்தடையினை ஏற்படுத்தி வீதி முழுவதுமாக ஆக்கிரமித்து நெல் உலர வைத்துள்ளமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளது.

காலபோக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கான போதியளவு உலரவிடும் தளம் இன்மையால் வருடா வருடம் காபெற் வீதிகளில் நெல் உலர விடும் அவலம் தொடா்கின்றமை வழமை இருப்பினும்,

வீதியின் ஒரு பகுதியில் நெல்லை உலர வைப்பதுடன் மறு பகுதியினை போக்குவரத்து ஏற்றவகையில் விடுகின்றமையடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

எனினும் சின்னத்தம்பனை ஊடாக செட்டிகுளம் – உலுக்குளம் பிரதான வீதிக்கு செல்லும் காபைட் வீதியில் தனிநபர் ஒருவர் வீதித்தடையினை ஏற்படுத்தி வீதி முழுவதுமாக ஆக்கிரமித்து நெல் உலர வைத்துள்ளமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளதுமையுடன் மக்கள் மாற்று வீதியூடாக செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இவ்விடயத்தில் செட்டிக்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் கவனம் செலுத்தி மக்களின் போக்குவரத்திற்கு இடையுறு இல்லாத வகையில் பாதையில் நெல்லை உலர வைக்க பணிக்குமாறும் அல்லது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.