கருப்பாக பிறந்ததால் மரணத்தை தழுவிய பெண்!!

545

Black

கருப்பான நிறத்தை வைத்து கணவன் சித்தரவதை செய்ததால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் ஜோதிபார்க்கை சேர்ந்தவர் விரேந்திரபிரகாஷ். அவரது மனைவி பூஜா. இருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் பிரகாஷ் எப்போதும் தனது மனைவியிடம், அவரது பெற்றோரிடம் சென்று பணம் பெற்று வருமாறு தகராறு செய்துள்ளார். மேலும் பூஜா கருப்பு நிறமாக இருந்ததால் நிறத்தை வைத்து கடுமையாக சித்திரவதை செய்துள்ளார்.

இதனால் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள பூஜா கடந்த செவ்வாய் அன்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார் வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பூஜாவின் தந்தை கூறுகையில், என்னால் முடிந்தவரை 8 லட்சம் வரதட்சணையாக கொடுத்துள்ளேன், ஆனால் பிரகாஷ் எனது மகளை கொடுமை செய்து துன்புறுத்தியுள்ளான் என்று கூறியுள்ளார்.

மேலும், எனது இளைய மகளான சினேகா, அக்காவின் நிறத்தை வைத்து கணவர் சித்தரவதை செய்ததாக, சம்பவத்தன்று, காலையில் அக்கா என்னிடம் பேசியபோது இதனை கூறி அழுதார் என்று கூறியுள்ளார்.