பாடசாலை மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

764

Sucide

பாடசாலை மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ராகம – வல்பொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து இன்று பகல் 1.50க்கு புறப்பட்ட ரயிலுக்கு முன்னால் பாய்ந்தே இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜா-எல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் பயின்று வந்த மாணவியே இந்த சம்பவம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவியின் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.