திறந்த நீரில் முதல் பயணம் செய்துள்ள உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணிகள் கப்பல்!!

1078

பின்லாந்தில்..

பின்லாந்து நாடானது உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணிகள் கப்பலின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில், கடல் சோதனைகளுக்காக திறந்த நீரில் முதல் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள Royal Caribbean International’s Icon of the Seas என்ற இந்த கப்பலானது 365 மீட்டர்கள் நீளம் கொண்டது.

குறித்த கப்பலானது 250,800 டன் பாரம் தாங்கக் கூடியது என்பதுடன், உலகின் மிகப்பெரிய நீர் பூங்காவையும் கொண்டுள்ளது. இதில் 5610 பயணிகள் மற்றும் 2350 பணிக்குழுவுக்கும் பயணிக்க வசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது உலகில் இருக்கும் மிகப்பெரிய பயணிகள் கப்பல் Wonder of the sea ஆகும். 1188 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பலான கடந்த வருடம் தனது பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.