உக்ரைனில் இருந்து 4 இலங்கை மாணவர்களை மீட்ட இந்தியா!!

574

L

ரஸ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு யுக்ரெய்னில் இருந்து நான்கு இலங்கை மாணவர்களை இந்திய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இந்திய வெளியுறவு பேச்சாளர் சயீட் அக்பர்டீன் இதனை தெரிவித்துள்ளார். இந்த பிரதேசத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 1000க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.

இதன்போதே இலங்கை மீனவர்களும் அங்கிருந்து அகற்றப்பட்டதாக அக்பர்டீன் குறிப்பிட்டார்.

இலங்கை மாணவர்களை தவிர நேபாளம், பூட்டான், பங்களாதேஸ், பாகிஸ்தான், மாலைதீவு ஆகிய நாடுகளின் மாணவர்களும் அகற்றப்பட்டதாக அக்பர்டீன் தெரிவித்தார்.